search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே விபத்து"

    • லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது
    • டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம்,  லாசல்கான் அருகே ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிக்கான டவர் வேகன் வாகனம் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஊழியர்கள் மீது டவர் வேகன் மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    டவர் வேகன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது, அவரை சக ஊழியர்கள் தாக்கினர்.

    லாசல்கான் மற்றும் உகான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் அதிகாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. டிராக்மேன்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, டவர் வேகன் தவறான பாதையில் வந்து அவர்கள் மீது மோதியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    • டிரைவர் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • சென்னை- திருவனந்தபுரம், சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் இன்று மாலை தண்டவாளத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக கோவை நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் மின்கம்பி விழுந்ததை கவனித்த டிரைவர், துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    மின் கம்பி அறுந்து விழுந்த தகவல் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. சென்னை- திருவனந்தபுரம், சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ×