என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ் நாத் சிங்"

    மாவோயிஸ்டுகளிடம் இருந்து பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் வந்துள்ள காரணத்தினால், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனையில் இன்று ஈடுபட்டார். #RajnathSingh #PMModi
    புதுடெல்லி :

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை இன்று கூட்டினார்.  உள்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு முகமை, புலனாய்வு முகமை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். 

    இந்த ஆலோசனை கூட்டத்தின் போது ராஜ்நாத் சிங், பிரதமர் மோடிக்கு அச்சுருத்தல் வந்துள்ள காரணத்தினால், பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது, பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து முக்கிய நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  #RajnathSingh #PMModi 
    ×