search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்பதிவு மையம்"

    • தினமும் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை பயணிகள் டிக்கெட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
    • இந்த முன்பதிவு மையம் ஞாயிற்றுகிழமைகளில் செயல்படாமல் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அகல ரெயில் பாதை ஏற்படுத்தப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில்களில் அப்பகுதி மக்கள்பயணம் செய்ய ஏதுவாகரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் பயணிகள் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    மேலும், இங்கு தட்கல் ரெயில் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த முன்பதிவு மையம் ஞாயிற்று கிழமைகளில் செயல்படாமல் உள்ளது.

    இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர்.

    எனவே, பயணிகளின் நலன் கருதி ஞாயிற்றுகி ழமைகளிலும் முன்பதிவு மையத்தை திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணி குறித்த ஒத்திகை நடைபெறுவதால் முன்பதிவு மையம் 2½ மணி நேரம் இயங்காது என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னையில் பயணிகள் முன்பதிவு அமைப்புக்கு நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணி குறித்த ஒத்திகை நடைபெறுகிறது. எனவே நாளை மதியம் 2.15 மணி முதல் 3.15 மணி வரை 1 மணி நேரமும் மற்றும் நாளை இரவு 11.45 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 1.20 மணி வரை 1 மணி நேரம் 35 நிமிடங்களும் பயணிகள் முன்பதிவு அமைப்பு செயல்படாது.



    மேலும் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மைய கவுண்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதியும், 139 சேவையும், ரெயில்வே இணையதளமும் இந்த நேரங்களில் செயல்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×