என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னோடி"

    • மருத்துவத்துறையில் தஞ்சாவூர் மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.
    • மாநில அளவில் பிரசவங்கள் எண்ணிக்கையில் ராசா மிராசுதார் மருத்துவமனை 5-ம் இடம் பிடித்துள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில், மகளிர் மற்றும் மகப்பேறு துறை சார்பில் இன்று பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார்.

    ராசாமிராசுதாரர் மருத்துவமனை மகப்பேறு துறைத் தலைவர் மற்றும் தலைமை பேராசிரியர் ராஜராஜேஸ்வரி வரவேற்று பேசினார்.இந்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கண்புரை அறுவை சிகிச்சையில் மாநில அளவில் தஞ்சாவூர் 2-ம் இடம் பிடித்துள்ளது. இது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாள ர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மருத்துவத்துறையில் தஞ்சாவூர் மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.

    மாநில அளவில் பிரசவ ங்கள் எண்ணிக்கையில் ராசா மிராசுதார் மருத்துவமனை 5-ம் இடம் பிடித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க மகப்பேறு இறப்பு விகிதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. இதனை குறைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நமச்சிவாயம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் திலகம், குடும்ப நல இணை இயக்குநர் மலர்விழி, நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், கண்காணிப்பாளர் ராமசாமி, துணை கண்காணிப்பாளர் ரவி , மருத்துவ நிபுணர்கள் பராந்தகன், உதய அருணா, அஞ்சு பத்மாசேகர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய செவிலியர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை செவிலிய ர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×