search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய அதிகாரி கைது"

    • அம்மா பெயரில் உள்ள மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய முத்துகணேசன் விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.
    • இளநிலை மின் பொறியாளராக பணியாற்றும் குணசேகரன் ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

    சோழவந்தான்:

    மதுரை சோழவந்தானை அடுத்த காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகணேசன். இவர் தன்னுடைய அம்மா பெயரில் உள்ள மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

    அப்போது அங்கு இளநிலை மின் பொறியாளராக பணியாற்றும் குணசேகரன் ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி முத்துகணேசன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு இன்று காலை விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று குணசேகரனிடம் ரூ.2,500 லஞ்சம் கொடுத்துள்ளார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா ஆகியோர் கையும் களவுமாக குணசேகரனை பிடித்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் விக்கிரமங்கலம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பொன்ராஜா என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
    • பாரதி சங்கர் இன்று காலை ரசாயனம் தடவிய 5 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இளநிலை பொறியாளர் பொன் ராஜாவிடம் வழங்கினார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் பொன்ராஜா என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

    நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்றுவதற்காக கோவில்பட்டியை சேர்ந்த பாரதிசங்கர் என்பவர் நாலாட்டின்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

    அந்த விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வதற்கு பொன்ராஜா, பாரதி சங்கரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து பாரதிசங்கர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் ஆலோசனைபடி பாரதி சங்கர் இன்று காலை ரசாயனம் தடவிய 5 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இளநிலை பொறியாளர் பொன் ராஜாவிடம் வழங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பொன்ராஜாவை பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×