search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி பலி"

    • தங்கபிரகாசம் காது கேட்காமல், வாய் பேசமுடியாத மாற்றுத்திற னாளி.
    • ெரயிவே ட்ராக்கில் தங்கபிரகாசம் நடை பயிற்சி செய்தார். அப்போது பின்னால் வந்த ெரயிலை கவனிக்கவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நடுகளம் பேட்டையை சேர்ந்த வர் தங்கபிரகாசம் (வயது45). கூலி தொழிலாளி. இவர் காது கேட்காமல், வாய் பேசமுடியாத மாற்றுத்திற னாளி. கடந்த சில மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில் ெரயிவே ட்ராக்கில் தங்கபிரகாசம் நடை பயிற்சி செய்தார். அப்போது பின்னால் வந்த ெரயிலை கவனிக்கவில்லை. இதனால் ெரயில் தங்கபிரகாசம் மீது மோதியது. இதில் அதே இடத்தில் தங்கபிராசம் உயிர் இழந்தார். இது குறித்து, அவரது மகன் ஆல்பர்ராஜ் பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளி உயிரிழந்தது குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும் படி வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த முதியனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (38) மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சாம்ராஜ்நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டெருமை கூட்டம் ரோட்டை கடந்து சென்றது. அதில் ஒரு காட்டெருமை ராஜூவின் தலையில் தாக்கியது. இதில் கீழே விழுந்த அவருக்கு காதில் ரத்தம் வந்தது. அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் 108 ஆம்புலன்சு மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜூ பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும் படி வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    ×