search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான் உயிரிழப்பு"

    • வனவர் ஈஸ்வரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் கோம்பை தொழு பகுதியில் விசாரணை நடத்தினர்.
    • வன விலங்குகள் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டால் அதனை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எச்சரித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை வனச்சரகத்துக்குட்பட்ட கோம்பைத்தொழு பகுதியில் மான் வேட்டையாடி அதன் இறைச்சியை மறைத்து வைத்திருப்பதாக வனச்சரகர் அஜய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் வனவர் ஈஸ்வரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் கோம்பை தொழு பகுதியில் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 54) என்பவர் வீட்டில் குக்கரில் சமைத்து வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ கொண்ட மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த அழகுராஜா என்பவர் தோட்டத்தில் செந்நாய் கடித்து மான் இறந்து கிடந்ததாகவும், தான் மாலை அணிந்து இருப்பதால் அந்த இறைச்சியை எடுத்துச் செல்லுமாறு அவர் கூறியதாகவும் வனத்துறையினரிடம் முருகன் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து முருகனை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்த இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். வன விலங்குகள் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டால் அதனை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எச்சரித்தனர்.

    ×