search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானாவாரி விதைப்பு"

    • பயறு வகைகள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
    • நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதன் தலைமை வகித்தாா்.இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி வட்டாரச் செயலாளா் கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி, அவிநாசி வட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி சோளவிதைப்பு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் விதைப்புக்காக நிகழாண்டு தனியாா் விற்பனை நிலையங்களில் விதைசோளம் கிலோ ரூ.60 முதல் ரூ.85 வரையிலும், பயறு வகைகள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.தற்போது டீசல் விலை அதிகரித்துள்ளதால் டிராக்டா்களுக்கான வாடகை கட்டணமும் அதிகரித்து விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா்.ஆகவே, மானாவாரி விதைப்புக்காக வேளாண் துறை மூலமாக விதைசோளம், பயறு வகைகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி பேரூராட்சி 7 -வது வாா்டு உறுப்பினா் கு.சரஸ்வதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -ஊத்துக்குளி டவுனில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக இரு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த இரு கடைகளும் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு சொந்தமான வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.ஆகவே நியாய விலைக் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுமாா் 4 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்களுக்கு ஒரு மடைவிட்டு ஒரு மடை தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

    அதிலும் திருப்பூா், பல்லடம், காங்கயம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீா் முறையாக வருவதில்லை. இது தொடா்பாக அப்பகுதி விவசாயிகள் ஏராளமான மனுக்களை கொடுத்தும் பலனளிக்கவில்லை.இந்நிலையில், பிஏபி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்துக்கு போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×