search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறைமுக ஏலம்"

    • வியாபாரிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அதிகாரியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
    • இந்த கமிட்டியில் 15 நாட்கள் வரை இலவசமாக இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே வளத்தியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு அதிகமாக நெல் மூட்டைகள் வராததால் வியாபாரிகளும் அதிகமாக வருவதில்லை. எனவே குறைந்த அளவே கணக்கீடு வைத்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. வளத்தியில் பழைய முறைப்படி நடைபெறும் ஏலத்தில் விவசாயிகளும் வியாபாரிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அதிகாரியும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் விற்பனை குழு எல்லைக்குட்பட்ட வளத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 . 1. 2023 முதல் நெல் மறைமுக ஏலம் தொடங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் நெல் விலை பொருட்களை இங்கு விற்பனை செய்து அதிகபட்ச விலை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எனவே விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை நன்கு காய வைத்து தூய்மையாக கொண்டு வந்து கூடுதல் விலை பெற வேண்டும் எனவும் இந்த மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் செஞ்சி, அவலூர்பேட்டை, கீழ்பெண்ணாத்தூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே இதில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைய வேண்டும் எனவும் மேலும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை இந்த கமிட்டியில் 15 நாட்கள் வரை இலவசமாக இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் குறைந்த வாடகையில் 180 நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளலாம். .மேலும் நெல் மூட்டைகளை இருப்பு வைத்து அதற்காக பொருளீட்டுக்கடனாக விலை பொருள் மதிப்பிற்கு ரூ 3 லட்சம் வரை கடனாக குறைந்த வட்டியில் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×