என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுக்கள் பெறும் முகாம்"

    • தென்மாத்தூரில் நடந்தது
    • அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா தென்மாத்தூர் வருவாய் கிராமத்தில் கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் இன்று நடந்தது. இதை யொட்டி பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    • மனுக்களை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
    • மின்சார வசதி, போக்குவரத்து வசதி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவுள்ளது

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம், பாகலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஓசூர் தொகுதிக்குட்பட்ட பாகலூர், பெலத்தூர், பாலிகானபள்ளி உள்ளிட்ட 32 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் நேரத்திலும், அதற்கு முன்பாகவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். அதனடிப்படையில், அவர் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற ஒரு துறையை உருவாக்கி அத்துறை மூலம் அனைத்து கோரிக்கைகளின் மீதும் தனிக் கவனம் செலுத்தி தீர்க்கப்படக்கூடிய கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றி தந்துள்ளார்.

    தமிழக முதலமைச்சரிடம் மனு அளித்தால், அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இன்று ஓசூர் தொகுதிக்குட்பட 32 ஊராட்சிகளில், எம்.எல்.ஏ. நேரிடையாக சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளான சாலை வசதி, குடிநீர் வசதி,இலவச வீட்டு மனை பட்டா, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவுள்ளது" இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார். பின்னர் அவர், ஓசூர் எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்து 6,000 மதிப்பில் பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ. 6 லட்சத்து 50,000 மதிப்பில் கொல்லபேட்டையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.4 லட்சம் மதிப்பில் பஜனை மந்திர வீதி சாய்பாபா கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.3 லட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.20 லட்சத்து 56,000 மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராயணசாமி, பாகலூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.டி. ஜெயராமன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×