search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு நடவடிக்கை"

    • வெளிமார்க்கெட்டில் தேங்காய் விலையும், கொப்பரை தேங்காய் விலையும் கடுமையாக சரிந்தது
    • தமிழகத்தில் மீண்டும் கொப்பரை கொள்முதலை துவங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    பொள்ளாச்சி::

    ஆதார விலை கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து கொள்முதல் செய்ய காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீடித்துள்ளது.

    தமிழகத்தில் தேங்காய் விலை சரிவை தடுக்க மத்திய, மாநில அரசு கிலோ ஒன்றுக்கு கொப்பரை தேங்காய்க்கு ரூ.105.90 விலை நிர்ணயம் செய்துள்ளது.

    இதன்படி தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், கொப்பரை கொள்முதல் முறையாக நடைபெறவில்லை என்றும் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 50 ஆயிரம் டன் கொப்பரையை ஆதார விலையை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

    ஆனால், இந்த கால கட்டத்தில் 12 ஆயிரம் டன் கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வெளிமார்க்கெட்டில் தேங்காய் விலையும், கொப்பரை தேங்காய் விலையும் கடுமையாக சரிந்தது.

    இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை தெற்கு வானதிசீனிவாசன், வால்பாறை அமுல்க ந்தசாமி ஆகியோர் மத்திய வேளாண் அமைச்சரை 25-ந் தேதி சந்திதித்து தேங்காய் கொப்பரை ஆதார விலையை ரூ.150 ஆக உயர்த்த வேண்டும், தமிழகத்தில் மீண்டும் கொப்பரை கொள்முதலை துவங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    இதையடுத்து, 26-ந் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழகத்தில் ஆதார விலை கொப்பரை கொள்முதலை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி முறையாக தமிழக அரசு செப்டம்பர் 30 வரை கொப்பரை கொள்முதல் செய்தால் வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலையும், தேங்காய் விலையும் உயரும் வாய்ப்புள்ளது

    ×