search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானம் கடத்தல்"

    • மயிலாடுதுறையில் இருந்து புதுவைவழியாக அரசு பஸ்சில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • விலை உயர்ந்த பைகளை சோதனை செய்த போது விலை உயர்ந்த 750 மில்லி கொள்ளளவு கொண்ட 86 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்திலிருந்து விழுப்புரம் மாவட்ட ம் வழியாக வெளிமாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா செய்து வருகிறார்.அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன.

    இந்நிலையில் ஆரோ வில்போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் சிறப்புசப் இன்ஸ்பெக்டர்முருகவேல் போலீஸ் ராம்மூர்த்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மயிலாடுதுறையில் இருந்து புதுவை வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்சில் வாகன சோதனை செய்யப்பட்டது. அப்பொழுது 2 பெண்கள் சந்தேகத்து இடமாக அமர்ந்திருந்தனர்.

    அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த பைகளை சோதனை செய்த போது விலை உயர்ந்த 750 மில்லி கொள்ளளவு கொண்ட 86 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில்தி ருவ ண்ணாமலை பவுத்தி ரம்மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் மனைவி வள்ளி எனவும், அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி ராட் பூமாதேவி என விசாரணை தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கோட்டகுப்பம் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமியிடம் ஒப்ப டைத்தனர் அவர்கள் இருவரும் வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமு தல் செய்யப்பட்டது மேலும் இருவரும் கைது செய்ய ப்பட்டு சிறையில் அடை க்கப்பட்டனர்.

    ×