search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாபெரியவர்"

    • திருமணம் உட்பட்ட சுப நிகழ்ச்சிகள் தடை ஏற்படாமல் நல்லபடியாக வெற்றிகரமாக நடைபெற இந்த சுலோகத்தை சொல்லி வரவும்.
    • இது மகா பெரியவா அனுகிரகம் செய்த சுலோகம்.

    திருமணத் தடை விலகவும் அனைத்து மங்கள காரியங்களும் தடையின்றி நடக்கவும் வேண்டி ஸ்ரீ மகா பெரியவாள் இயற்றி அனுக்ரகித்த ஸ்தோத்திரம் இது.

    திருமணம் உட்பட்ட சுப நிகழ்ச்சிகள் தடை ஏற்படாமல் நல்லபடியாக வெற்றிகரமாக நடைபெற இந்த சுலோகத்தை சொல்லி வரவும். இது மகா பெரியவா அனுகிரகம் செய்த சுலோகம்.

    இந்த ஸ்தோத்திரத்தை ஜகன் மாதாவான ஸ்வர்ண காமாட்சியை மனதில் நினைத்து தை மாதம், ஆடி மாதம் இரு மாதங்களில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி விளக்கு ஏற்றி வைத்து 7 முறை தீப பிரதட்சணம் (தீபத்தை சுற்றி வரவும்) செய்து பக்தியுடன் இதைச் சொன்னால் மங்கள காரியம் எதுவானாலும் நடக்கும்.

    1. மங்கள சரணே மங்கள வதனே

    மங்கள தாயினி காமாட்சி!

    குருகுக ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    2. கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயிணி

    துஷ்ட விநாசினி காமாட்சி!

    குருகுக ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    3. ஹிமகிரி தனயே மமக்ருதி நிலயே

    சஜ்ஜன சதயே காமாட்சி!

    குருகுஹ ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    4. கிருகநுத சரணே கிருக சூத தாயினி

    நவ நவ பவதே காமாட்சி!

    குருகுக ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    5. சிவமுக விநுதே பவசூக தாயினி

    நவ நவ பவதே காமாட்சி!

    குருகுக ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    6. பக்த சூமானச தாப விநாசினி

    மங்கள தாயினி காமாட்சி!

    குருகுக ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    7. கேனோபனிஷத் வாக்ய வினோதினி

    தேவி பராசக்தி காமாட்சி!

    குருகுக ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    8. பரசிவ ஜாயே வர முனி பாவ்யே

    அகிலாண்டேஸ்வரி காமாட்சி!

    குருகுக ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    9. ஹரித்ரா மண்டல வாசினி நித்யே

    மங்கள தாயினி காமாட்சி!

    குருகுக ஜனனீ குரு கல்யாணம்

    குஞ்ஜரி ஜனனீ காமாட்சி!!

    "சர்வே ஜன சுகிநோ பவந்து"

    • “உரு ஏறத் திரு ஏறும்” என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.
    • ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.

    1960ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் மாங்காட்டிற்கு விஜயம் செய்தார்.

    வேண்டுவார் வேண்டுவதை அருள வல்லதும், ஸ்ரீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மகா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்தமேரு அங்கு இருந்தும் கூட,

    அதை தரிசித்துப் பயன்பெறுவதிலே மக்கள் அவ்வளவாக ஆர்வம் இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களது கருணை உள்ளம் வேதனை அடைந்தது.

    தான் வழக்கமாகப் படுத்து உறங்கும் கட்டிலுக்கு அடியிலே ஒரு பெரும் புதையல் இருப்பதை அறியாமல்,

    ஒருவன் நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் பிச்சை எடுத்தே வயிறு வளர்த்து வந்தானாம்.

    அதே போல், அள்ள அள்ளக் குறையாத ஓர் அளப்பரும் திருவருட் களஞ்சியம் மாங்காட்டிலே இருந்தும்,

    அதை அறியாமல் மக்கள் தம் குறைகளைப் போக்கிக் கொள்வதற்காக எங்கெங்கோ அலைந்து ஏங்கித் தவிக்கிறார்களே என்று

    ஸ்ரீஅச்சய சாமிகள் இரக்கம் கொண்டார்கள்.

    அங்குள்ள பரம்பரை அர்ச்சகராகிய மறைத்திரு ஏகாம்பர சிவாச்சாரியாரிடத்தில் இது பற்றி உரையாடினார்கள்.

    காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய சாமிகளின் ஆணையை சிரமேற்கொண்டு, அவர்கள் காட்டிய நெறியே நின்று,

    ஆலயத்தினுள்ளே நாள் தோறும் தீவிரமான ஜபயோக சாதனையில் ஈடுபடலானார் ஸ்ரீஏகாம்பர சிவாச்சாரியர்.

    அதன் பலனைத்தான் இன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பெருகி வழிகின்ற பக்தர்களின் கூட்டத்திலே நாம் பார்த்து மகிழ்கிறோம்.

    "உரு ஏறத் திரு ஏறும்" என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.

    அந்த நியதிப்படியே, சிவாச்சார்யரின் ஜபயக்ஞம் ஏறஏற, ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.

    கோவில் அதிகாரிகளால் எளிதில் சமாளிக்க முடியாத அளவுக்கு, இன்னமும் பெருகிக் கொண்டே வருகிறது.

    ×