search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி"

    ஊட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடைபெற்றது. பேரணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். பேரணி ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, புளுமவுண்டன் சாலை, கமர்சியல் சாலை வழியாக பிரிக்ஸ் பள்ளி வரை சென்றது. பேரணியில் தனியார் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    கள்ளச்சாராயம் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம் ஏற்படும். நரம்புத் தளர்ச்சி, கை கால்கள் நடுக்கத்தை உண்டாக்கும். பசியின்னை ஏற்படுவதோடு, நினைவாற்றல் குறையும். கண்பார்வை பறிபோவதோடு, ஜீரண சக்தி குறையும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பல தீமைகளில் இருந்து விடுபட கள்ளச்சாராயத்தை ஒழிப்போம் என்று துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்படுகிறது. கடந்த 5-ந் தேதி ஊட்டி தலைகுந்தா பகுதியில் உள்ள ஒரு கடையில், போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.நீலகிரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசுருதீன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    ×