search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்கள் முற்றுகை"

    திருப்பத்தூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுத்தம் செய்யப்படாததை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயில் 850-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளி கழிவறையை மாத கணக்கில் சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் கழிவறையில் நேப்கின் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.

    இதனைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை ஷெலினா அங்கு இல்லை. இதனால் ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவிகள் கழிவறையில் தண்ணீர் வசதி உள்ளது. கழிவறையை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    வடமதுரையில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டது. எனவே இதனை சீரமைத்து தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மழை காலத்தில் தண்ணீர் வகுப்பறையில் தேங்கி நிற்கும் நிலை இருந்ததால் மாணவர்கள் கல்வி பயிலவும் சிரமப்பட்டு வந்தனர்.

    எனவே இந்த கட்டிடத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் வடமதுரை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர்.

    அவர்களுக்கு அந்த பள்ளியில் இருந்த ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டது. ஆனால் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லாததால் இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் இன்று மாணவ-மாணவிகளுடன் பெற்றோர்களும் பழைய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பள்ளி கட்டிடம் கட்டும் முன்பாக தகுந்த வசதியுள்ள இடத்தில் மாணவர்களுக்கு கல்வி பாதிக்காத வகையில் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×