search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள்சாமி"

    ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி இன்று ஆஜரானார். #JayaDeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பணியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உறவினர்கள், ஊழியர்கள் என பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    ஜெயலலிதாவின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரி பெருமாள்சாமி இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

    அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வக்கீல் மஹீடினா பாட்ஷா ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    விசாரணை ஆணையத்தில் 11 மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    ஆணையத்தில் ஆஜராகும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்யப்படுகிறது. இது ஆணையத்திற்கு எதிரானதாக உள்ளது.

    அதனால் அவற்றை சரியாக பதிவு செய்ய ஆணையத்தில் மருத்துவக் குழு அமைக்க கோரி மனு அளித்துள்ளோம். நிறைய சிறப்பு மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அனைத்து மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை வழங்கியுள்ளனர்.


    ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கவில்லை. பல்வேறு விருதுகள் பெற்ற மருத்துவர்களான ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

    மாநில அரசு கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி வைத்தது.

    ஆணைய வக்கீல்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிராக உள்ளது. நாங்கள் மருத்துவக்குழுவை காலதாமதமாக கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதமே மருத்துவ குழுவை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளோம்.

    மருத்துவகுழு அமைக்கப்பட்டால் மட்டுமே அப்பல்லோ மருத்துவர்கள் அளிக்கும் தகவல்களை முறையாக பதிவு செய்ய முடியும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட முழு சிகிச்சை விவரங்களை வழங்கி உள்ளோம்.

    மருத்துவம் குறித்த விவரங்கள் தெரியாமல் ஜெயலலிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர். அனைத்து மருத்துவர்களும் அவருக்கு முடிந்த அளவு சிறப்பு சிகிச்சையை வழங்கி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது அப்பல்லோவின் முடிவல்ல. அரசின் முடிவு.

    ஆணையம் சார்பில் மருத்துவகுழு அமைக்கப்படும் வரை அப்பல்லோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராக மாட்டார்கள். எனவே வேறு ஒரு நாளில் மருத்துவர்களுக்கு சம்மன் அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். 21 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #JayaDeathprobe
    ×