search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித யாத்திரை"

    கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரையின் துவக்கத்தில் ராகுல்காந்தி அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்ததையடுத்து அவர் சாப்பிட்ட ஓட்டல் விளக்கம் அளித்தது. #RahulGandhi #MansarovarYatra
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ந் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றார். அன்று இரவு அங்குள்ள வூட்டு ஓட்டலில் ராகுல்காந்தி தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட்டார்.

    அப்போது அவர் அசைவ உணவு வகைகளையும், சிக்கன் சூப்பும் சாப்பிட்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

    அந்த ஓட்டல் ஊழியரிடம் பேட்டி எடுத்து செய்தியை வெளியிட்டு இருந்தது.

    இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி கூறும் போது, “ராகுல்காந்தி புனித யாத்திரை செல்லும் போது அசைவ உணவை சாப்பிட்டதன் மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தி விட்டார். அவர் அசைவம் சாப்பிட்டதில் தவறு இல்லை. புனித யாத்திரை சென்றபோது அசைவம் சாப்பிட்டது கண்டிக்கத்தக்கது” என்றார்.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து வூட்டு ஓட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ராகுல்காந்தி சைவ உணவுகளையே சாப்பிட்டதாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இமாச்சல பிரதேச மாநிலம் ஜாவாலி தொகுதி காங்கிரஸ் முன்னாள் நீரஞ்பார்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணரின் கதையை விளக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. #RahulGandhi #MansarovarYatra 
    ×