search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகபை"

    • மாணவர் சமுதாயம் முன்னேற தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • மாணவர்களுக்கு புத்தகபை முதல் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவதை பயன்படுத்தி முழுமையான கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மூத்தாக்குறிச்சி அரசு தொடக்க பள்ளிக்கு சுமார் ரூ.50,000 மதிப்பீட்டில் மின்விசிறிகள் மற்றும் மின் குழல்விளக்குகள் மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலை பள்ளி முதல்வர் ரவிச்சந்திரன் , மூத்தாக்குறிச்சி அரசு தொடக்க பள்ளி முதல்வர் செல்வராணி ஆகியோர் கலந்துகொண்டு ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட மின்விசிறிகள் மற்றும் குழல்விளக்குகளை பெற்றுக்கொண்டு பேசுகையில் "எதிர்கால இந்தியா என அழைக்கப்படும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் .

    மாணவர் சமுதாயம் முன்னேற தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். மாணவர்களுக்கு புத்தகபை முதல் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவதை பயன்படுத்தி முழுமையான கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

    ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் பேசுகையில் " தனியார் பள்ளிகளை போல் , அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த அரசு தரப்பில் திட்டங்களை செயல்படுத்தும் போது அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் , தொண்டு நிறுவனங்கள் , ஆர்வமுள்ள தனிநபர்கள் முன்வரும்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரும் " என்று நம்பிக்கை தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை மேலாளர் சுந்தரி , களப்பணியாளர்கள் சிவரஞ்சனி , ராஜாகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×