search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதியசெயலி"

    • மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • புதிய செயலியை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுராஜாராம் தொடங்கிவைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் மனுதாரர்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், போலீஸ் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளும் வகையிலும் உருவாக்கப் பட்ட புதிய செயலியை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுராஜாராம் தொடங்கிவைத்தார்.

    இதனை தொடர்ந்து புதிய செயலி மூலம் காவல்துறை உயர் அதிகாரிகள் புதிய செயல்களை அவ்வப்போது கண்காணித்து காவல் நிலையங்களில் புகார் மனு சம்பந்தமாக விவரம் தெரிந்து கொள்ள முடியும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியாக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு காவல் ஆளுநர்கள் புதிய செயலியை தொடர்ந்து கண்காணித்து முதல் தகவல் அறிக்கை மனு ,ரசீது பதிவு செய்த விவரம் மருத்துவ மனைகளில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல் களின்படி சட்டபடியான உரிய நடவடிக்கைகள், விசாரணை அதிகாரிகள் மனுதாரர்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இப்புதிய செயலி மூலம் காவல் நிலையத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி, குறித்த காலத்திற்குள் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அப்போது இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கள் சபியுல்லா, கரிகால் பாரி சங்கர், அசோகன், தேவராஜ், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், இன்ஸ்பெக்டர் குரு மூர்த்தி மற்றும் போலீ சார் கலந்து கொண்டனர்.

    ×