என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத் ஆர்கானிக்ஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, சர்க்கரை, பாஸ்மதி அரிசி, சோனாமசூரி அரிசி, ராஜ்மா ஆகியவை விற்பனை.
    • இயற்கை விவசாயம் 190 நாடுகளில் 749 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் செய்யப்பட்டு வருகிறது.

    மக்கள் எடுத்துக்கொள்ளும் உணவு தற்போது விசமாக மாறி வருகிறது. இதனால் பூச்சிக்கொல்லிகள், செயற்கை ஹார்மோன்கள், ரசாயன உரங்கள், கழிவுகள் ஆகியவை இல்லாமல் இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள் ஆர்கானிக் உணவு (இயற்கை விவசாய உற்பத்தி பொருட்கள்) என அழைக்கப்படும்.

    இயற்கை விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்க செலவு அதிகமாகும். இதனால் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், உற்பத்தி செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே உள்ளன.

    இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல மாநில அரசுகள், மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் இதற்காக மத்திய அரசு தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதற்கான லோகோ, இணைய தளம் உள்ளிட்டவைகளை அமித் ஷா வெளியிட்டுள்ள நிலையில், பாரத் ஆர்கானிக்ஸ் பிராண்ட்-ஐ அறிமுகப்படுத்தினார்.

    மேலும், ஐந்து கூட்டுறவு வங்கிகளுக்கு என்.சி.ஓ.எல். உறுப்பினர் சான்றிதழையும் வழங்கினார்.

    மேலும், இதுகுறித்து அவர் பேசுகையில் "என்.சி.ஓ.எல். ஆர்கானிக் உற்பத்தியாளருக்கு (இயற்கை விவசாயிகள்) ஒரு தளமாக அமையும். இன்று நாங்கள் பாரத் ஆர்கானிக்ஸ் பிராண்ட்-ன் கீழ் ஆறு பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். டிசம்பரில் 20 பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்.

    துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, சர்க்கரை, பாஸ்மதி அரிசி, சோனாமசூரி அரிசி, ராஜ்மா ஆகியவை சஃபால் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும். நாடு முழுவதும் சில்லறை விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். பின்னர் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் கிடைக்கும் வருவாயில் 50 சதவீதம் என்.சி.ஓ.எல். மூலம் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்" என்றார்.

    இயற்கை விவசாயம் 190 நாடுகளில் 749 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைமுறையில் உள்ளது. இதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 2020-ல் இருந்து இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. 2022-23-ல் இந்தியா 29 லட்சம் டன் தானியங்களை உற்பத்தி செய்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

    இதில் 3,12,000 டன் பொருட்கள் (5,525 கோடி ரூபாய்) அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மகாராஷ்டிரா, குஜராத், வடகிழக்கு மாநிலங்களில் சில மாநிலங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன. நாடு முழுவதும் 7.89 கூட்டுறவு சங்கங்களில் 29 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

    ×