search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் போர் கப்பல்"

    • தைமூர் கப்பலை ஆகஸ்ட் 15-ந் தேதி கராச்சிக்கு கொண்டு செல்ல சீனா திட்டம்.
    • தைமூரை சட்டோகிராம் துறைமுகத்தில் நிறுத்த பங்களாதேஷ் அனுமதி மறுப்பு.

    இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் இன்று இலஙகை வருகிறது. 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, பாகிஸ்தானுக்காக சீனா, பி.என்.எஸ் தைமூர் என்ற போர் கப்பலை தயாரித்துள்ளது. ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டதாகும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கராச்சிக்கு இதை கொண்டு செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த கப்பலை பங்களாதேஷ் கடல் பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்ல அந்நாட்டு அரசிடம் சீனா அனுமதி கோரியிருந்தது. ஆனால் சட்டோகிராம் துறைமுகத்தில் அந்த கப்பலை நிறுத்த பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டது.

    இதையடுத்து பாக் போர் கப்பலான தைமூரை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படையில் இணைப்பதற்காக செல்லும் வழியில், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    • இந்திய கடலோர காவல்படை விமானம் பாகிஸ்தான் கப்பல் மீது பறந்து எச்சரித்தது.
    • இந்திய தரப்பு கேள்விக்கு, பாகிஸ்தான் போர்க்கப்பல் கேப்டன் பதில் அளிக்கவில்லை.

    போர்பந்தர்:

    பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஆலம்கிர், நேற்று குஜராத் கடல் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை கோடு பகுதியை கடந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது. உடனடியாக இதை அறிந்த இந்திய கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த இந்திய கண்காணிப்பு விமானம், பாகிஸ்தான் போர்க் கப்பலின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்ததுடன் அதன் பகுதிக்குத் திரும்பும்படி வலியுறுத்தியது. டோர்னியர்,  ஆலம்கிர் மீது வட்டமிட்டுக் கொண்டே இருந்ததாகவும், கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 


    பாகிஸ்தான் போர் கப்பல் அத்துமீறியதன் நோக்கத்தை அறிய வானொலி மூலம் இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் கேப்டனுடன் தொடர்பு கொண்ட நிலையில் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை.

    இதையடுத்து டோர்னியர் விமானம் மூன்று முறை பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு முன்னால் பறந்து எச்சரித்தது. இதையடுத்து பின்வாங்கிய ஆலம்கீர், பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×