என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமத்தி அருகே"

    • ஒரே காரில் காரிப்பட்டியில் இருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழழகனின் உறவினர் சந்தோஷ் வீட்டிற்கு திருவிழாவிறகாக சென்றனர்.
    • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி மோதி விபத்துக்குள்ளாகி கார் கவிழ்ந்தது.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டி குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 35). கார் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களது மகள்கள் யோசிகா (6), தர்ஷா(3).

    இவர்களும், அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் பிரபாகரன், சம்ருத், சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், கிருத்திகா மற்றொரு பெண் குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் ஒரே காரில் காரிப்பட்டியில் இருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழழகனின் உறவினர் சந்தோஷ் வீட்டிற்கு திருவிழாவிறகாக சென்றனர். அவர்கள் சேலத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    தந்தை- மகள் பலி

    அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே மரவாபாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி மோதி விபத்துக்குள்ளாகி கார் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தமிழழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரது 3 வயது குழந்தை தர்ஷா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தது.

    சிகிச்சை

    படுகாயம் அடைந்த சதீஷ்குமார், விஜயலட்சுமி, கிருத்திகா, பிரபாகரன் , சம்ருத், யோசிகா மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகிய 7 பேருக்கும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து சம்பவம் குறித்து பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×