search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் வகைகள்"

    • சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
    • வாகன ஓட்டைகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த மே 4 -ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனல் காற்று கடுமையாக வீசி வருகின்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் புயல் ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக ஆங்காங்கே பயிர் வகைகள் நாசமாயின. இருந்த போதிலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து காண ப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி வருகிறது. இதில் கடந்த மே 19-ந்தேதி மற்றும் இரண்டு நாட்களாக தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது.

    இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு பழச்சாறுகள், பழ வகைகள், குளிர்பானங்கள், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு அவைகளின் தாக்கத்தை குறைத்து வருகின்றனர். இது மட்டுமின்றி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து வருவதையும் காண முடிந்தது. இதன் காரணமாக வழக்கமான சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டைகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சதம் அடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து தாக்கத்தால் அவதி அடைந்து வருவது காண முடிந்தது. ஆகையால் பொதுமக்கள் உணவு வகைகளை பாதுகாப்பாக எடுத்து தேவையின்றி வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்த க்கதாகும்.

    ×