search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்தையம்"

    • மாடு, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா எட்டியத்தளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம்.

    நேற்று நடைபெற்ற மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தையத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 43 ஜோடி மாடுகள் மற்றும் 36 குதிரைகள் கலந்து கொண்டன.

    மூன்று பிரிவுகளாக நடைபெற்ற எல்கை பந்தையத்தில் நடுமாடு பிரிவில் 16 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகளும், நடு குதிரை பிரிவில் 36 குதிரைகளும் பந்தையத்தில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு மற்றும் குதிரைகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பணமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு, சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. பந்தையத்தைக்கான அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர்.

    கருப்புப்பணத்தை தடுக்கும் வகையில் பந்தையங்கள் மற்றும் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக மாற்ற வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் சில வகை பந்தயங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை. இந்த செயல்பாடுகளின் வழியா கருப்புப்பணம், ஹவாலா பணம் ஆகியவை பெரும்பாலும் புழங்கும். இந்நிலையில், சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    பான் கார்டு, ஆதார் எண் ஆகியவை பெறப்பட்டு, முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் இதனை செயல்படுத்தினால் கருப்புப்பணத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×