search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவியேற்றார்"

    • சங்கராபுரம் ஊராட்சி தலைவராக தேவி மாங்குடி பதவியேற்றார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    இதில் தலைவர் பதவிக்கு தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் போட்டியிட்டனர்.இதில் வெற்றி பெற்றதாக முதலில் தேவி மாங்குடிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதற்கு பிரியதர்ஷினி அய்யப்பன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, தேவி மாங்குடி இல்லாமல் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக மற்றொரு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு முதலில் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் வேறொருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து தேவி மாங்குடி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிபதிகள் வெற்றி பெற்றதாக ஒருவருக்கு சான்றிதழ் வழங்கியபின் மற்றொருவருக்கு சான்றிதழ் வழங்க முடியாது எனவே 2-வதாக வழங்கப்பட்ட சான்றிதழுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இதையடுத்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் பிரியதர்சினி அய்யப்பன் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.ஆர். சுவாய், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

    தேவி மாங்குடி தரப்பில் முன்னாள் நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் ஆஜரானார்.பிரியதர்ஷினி அய்யப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வசந்த் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்க ளையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஐகோர்ட் கிளை உத்தரவில் நாங்கள் தலையிட விரும்ப வில்லை, எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர்.உச்சநீதிமன்ற தீர்ப்பை யடுத்து தன்னை பதவியேற்க அனுமதிக்கும்படி தேவி மாங்குடி தரப்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கலெக்டர் அனுமதியின்பேரில் சங்கரா புரம் ஊராட்சி மன்ற தலைவ ராக தேவி மாங்குடி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

    அவருக்கு சாக்கோட்டை ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா பதவிப் பிரமா ணம் செய்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பி னர் மாங்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், துணை பி.டி.ஓ பொன்னுச்சாமி, முன்னாள் ஆணையாளர் கேசவன் உள்பட காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×