search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி பாதிப்பு"

    • தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.
    • தேங்காய் களங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிக அளவில் களங்களை அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.

    தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப்பணிகள் முற்றிலுமாகப் பாதிப்படும். இந்த நிலையில் காங்கயம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு பெய்துவரும் சாரல் மழை மற்றும் கன மழையால் தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் செய்யமுடியாமல் முடங்கியுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதன் காரணமாக தேங்காய் களங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

    ×