search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண பரிவர்த்தனை குறித்த"

    • வங்கியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.
    • பண பரிவர்த்தனைக்கு பிரத்யேக கவுண்டர்களை திறப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வங்கியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பின்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் செலவினங்கள் குறித்த தொகுப்பில் வங்கி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகளான தேர்தல் நோக்கத்திற்காக வங்கி கணக்குகளை தொடங்குவதற்காக வங்கிகள் உடனடி சேவையை வழங்கவும்,

    பண பரிவர்த்தனைக்கு பிரத்யேக கவுண்டர்களை திறப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    வங்கிகளால் அவுட்சோ ர்சிங் செய்யப்பட்ட ஏஜென்சிகள் ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்கு செல்லும் போது வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதங்கள்,

    ஆவணங்கள் எடுத்துச் செல்லவும், அவுட்சோர்சிங் பணியாள ர்கள் அந்தந்த ஏெஜன்சி களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லவும்,

    பணமதிப்பு விபரங்கள் அடங்கிய தொகுப்பினையும் எடுத்துச்செல்லவும் தேர்தல் நடைமுறை விதிகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ள நேரத்தில் வழக்கத்திற்கு மாறான, சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக நடைபெற்றாலோ,

    பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலம் பணப்பரி மாற்றம் நடைபெற்றாலோ, வேட்பாளர்கள் அல்லது அவர்களது மனைவி அல்லது அவரை சார்ந்த வர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கு அதிகமான ரொக்க டெபாசிட் அல்லது ரொக்கத்தை திரும்ப பெறுதல் போன்ற பண பரிவர்த்தனைகள் இருந்தாலோ,

    வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் படுவ தற்கான சந்தேகத் திற்கிட மான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டா லோ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளிக்க அனைத்து வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேலான பணப்பரி வர்த்தனை மேற்கொள்ள ப்படும் போது வருமான வரித்துறை தேர்தல் மேற்பார்வை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும் வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்), தேர்தல் தாசில்தார் சிவகாமி, விஜயகுமார் (தாசில்தார், பேரிடர் மேலாண்மை), வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×