search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்நிலைகளை பாதுகாப்பு"

    • இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு உயர்கல்வியை பெற்று சுயவேலை வாய்ப்பை உருவாக்கலாம் என கூறினார்

    கோவை

    மே தினத்தினை முன்னிட்டு தொண்டா முத்தூர் வட்டாரம் இக்கரை போளுவாம்பட்டி, முள்ளாங்காடு சமுதாய நலக் கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது :-

    குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர்தினம், உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே தினத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், இக்கரை போளுவாம்பட்டி, ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது.

    இந்த கிராமம் அழகானதாக உள்ளது. தூய்மை பாரத இயக்கம், நம்ம ஊரு சூப்பரு போன்ற திட்டங்களில் இந்த கிராமம் முன்னோடியாக விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு இந்தப் பகுதியில் தான் உள்ளது. இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும். பிளா ஸ்டிக் பயன்படு த்துவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும்.

    இதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும். கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். சிறுவாணி சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் இங்கு உள்ளன. சுய உதவிக்குழுக்கள் மூலம் இந்த பகுதியில் சிறப்பு பெற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்ப டுகிறது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு போன்ற திட்டங்கள் செயல்படுத்த ப்படுகிறது. குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்க கூடாது. இந்த இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பள்ளி படிப்பு முடிக்கும் குழந்தைகளுக்கு கல்லூரி கல்வியை பயின்றால்தான் அவர்களுக்கான சரியான வேலை வாய்ப்பை பெற முடியும். கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு மாவட்ட ங்கள், மாநிலங்களை சேர்ந்த வர்களுக்கு வேலைவா ய்ப்பை வழங்கும் இடமாக நம் மாவட்டம் திகழ்கிறது. புதுமை பெண்கள் திட்டம், உள்ளிட்ட அரசின் திட்டங்க ளை சிறப்பாக பயன்படுத்தி குழந்தை களுக்கு உயர்கல்வியை பெற்று சுய வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.

    உயர்ந்த பணி வாய்ப்பினை பெறலாம். குழந்தை திருமணம் இல்லாத கிராமமாகவும், குழந்தை தொழிலாளர் இல்லாத கிராமமாகவும், சிறப்பான ஊராட்சியாக உருவாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×