search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலுவை வரி தொகையை"

    • வரி தொகைகளை பெற விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 5 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சி களில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினை வருகின்ற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை பெறலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவித்தார்.

    இதன்படி ஈரோடு மாநகராட்சியிலும் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாநகராட்சியில் வரி தொகைகளை பெற பல்வேறு வகையான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், வாகனங்களில் பொருத்த ப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    வரி நிலுவை தொகை வைத்திருந்தால் குடிநீர் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகிறோம்.

    மேலும் சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை செலுத்திட ஏற்படும் சிரமத்தை தவிர்க்க அவர்களது இல்லம் தேடி சென்றும் வரி வசூலிப்பாளர்கள் வசூலித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் அமைந்துள்ள வரி வசூல் மையங்களில் ஏ.டி.எம். கார்டு (கடன் மற்றும் பற்று அட்டை), காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் வரி தொகை செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவின்படி, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×