search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதித்தொகை"

    • ஆதரவற்ற மற்றும் தொற்றினாள் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
    • நகரப்பகுதிக்கு ரூ.30,000-லிருந்து ரூ.96,000 மாகவும் உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தாய், தந்தை அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு மிஷன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாதந்தோறும் ரூ.4000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானச்சான்று உச்ச வரம்பு கிராம பகுதிக்கு ரூ.24000-த்தில் இருந்து ரூ.72000-மாகவும், நகரப்பகுதிக்கு ரூ.30000-லிருந்து ரூ.96000-மாகவும் உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே நிதி ஆதரவு திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வருமானச்சான்று ரூ.72000-(கிராமப்பகுதி), ரூ.96000-(நகரப்பகுதி)-க்குள் பெறப்பட்டு, அதனுடன் குழந்தையின் கல்விச்சான்று, வங்கி கணக்கு எண், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பெற்றோரின் இறப்பு சான்று மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2 திருமஞ்சன வீதி, திருஇந்தலூர், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×