search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிக்கி தம்போலி"

    • டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி வழக்கு.
    • இரண்டு நடிகைகளை டெல்லி போலீசார் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.


    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. மேலும், மற்றொரு இந்தி நடிகையான நோரா பதேஹிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகரை டெல்லி திகார் ஜெயிலுக்கே சென்று 4 நடிகைகள் சந்தித்ததாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நிக்கி தம்போலி, சாஹத் கன்னா, சோபியா சிங், அருஷா பட்டீல் ஆகிய நடிகைகளை சுகேஷின் உதவியாளர் பிங்கி இரானி, திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்று சுகேஷ் சந்திரசேகரை சந்திக்க வைத்து உள்ளார்.


    நோரா பதேஹி

    சுகேஷ் சந்திரசேகர் தனது பெயரை ஒவ்வொரு நடிகையிடமும் வெவ்வேறாக கூறியுள்ளார். அந்த நடிகைகளுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்கி உள்ளார். திகார் ஜெயிலில் சுகேஷ் சந்திரசேகருக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர் என்றும் அங்கு அவர் சொகுசாக இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது அமலாக்கத்துறை அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் சுகேஷ் சந்திர சேகரை ஜெயிலில் சந்தித்து பேசிய 4 நடிகைகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகைகள் நிக்கி தம்போலி, சோபியா சிங் ஆகிய 2 பேரை டெல்லி போலீசார் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.


     நிக்கி தம்போலி

    சுகேஷ் சந்திர சேகரை ஜெயிலில் சந்தித்த போது என்னென்ன நடந்தது, சிறை அதிகாரிகள் எப்படி உதவி செய்தனர். எந்த அறையில் சுகேஷ் சந்திரசேகரை சந்தித்தனர் என்பதை நடிகைகள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, விசாரணையின் ஒரு பகுதியாக சுகேஷ் சந்திர சேகருடனான நடிகைகளின் சந்திப்புகளை மீண்டும் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடிகைகள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் இந்த மோசடி எவ்வாறு நடந்தது என்பது பற்றி எங்களுக்கு தெளிவான புரிதல் கிடைத்து உள்ளது.


    சோபியா சிங்

    சிறையில் தொலைக்காட்சி, சோபா, தரை விரிப்பு மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை சுகேஷ் சந்திரசேகர் வைத்திருந்து உள்ளார். இதில் சிறை பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. சுகேசை சந்திக்க வரும் பார்வையாளர்களின் சொகுசு கார்கள் சிறைக்குள் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படவில்லை.

    சிறை அதிகாரிகளுக்கு சுகேஷ் கோடிக்கணக்கில் செலவு செய்து உள்ளார். சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால் அவருக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதில் ஒவ்வொரு சிறை அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. சுகேஷ் சந்திரசேகரை சிறைக்குள் பலர் சந்தித்துள்ளனர். ஆனாலும் எங்கள் விசாரணைக்கு தொடர்புடையவர்களை மட்டுமே வரவழைக்கிறோம் என்றார். சுகேஷ் சந்திரசேகர் தற்போது மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • தமிழில் காஞ்சனா-3 படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி.
    • தற்போது இவர் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து பிரபலமடைந்தவர் நிக்கி தம்போலி. அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா-3 படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன்-14 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

     

    நிக்கி தம்போலி

    நிக்கி தம்போலி

    அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிக்கி தம்போலி, தற்போது பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    ×