search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாற்றுப்பண்ணை"

    • தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • மிளகாய்20 சதவீதமும், கத்தரி, காலிப்பிளவர் 10 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மடத்துக்குளம்,

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், காய்கறி பயிர் சாகுபடி பிரதானமாக உள்ளது.குறைந்த கால சாகுபடி, மகசூல், வருவாய் என்ற அடிப்படையில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.

    சாகுபடிக்கு தேவையான தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள், தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் உள்ளன. இங்கு குழித்தட்டுகளில் காய்கறி விதை நடவு செய்து 20 முதல் 25 நாட்கள் வளர்ந்த நாற்றுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவு இருக்கும் என்பதால் நாற்றுப்பண்ணைகளில் 70 சதவீதம் தக்காளி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சாகுபடி செய்வதற்கு தேவையான நாற்றுக்கள் வினியோகம் செய்வதற்காக உடுமலை பகுதியிலுள்ள ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளிலும் தலா 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளது.தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது: -

    தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து, நாற்றுப்பண்ணைகளில் தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்பிளவர் உள்ளிட்ட நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.கடந்த வாரம் மழை பெய்ததால், விற்பனை அதிகரித்தது. தென்மேற்கு பருவ மழை துவங்க தாமதமாவதால் தற்போது விற்பனை குறைந்துள்ளது. மழை துவங்கியதும் விற்பனையும், நடவும் தீவிரமடையும். தக்காளி நாற்று ரகத்திற்கு ஏற்ப 50 முதல் 80 பைசா வரையும், பந்தல் சாகுபடியில் ஆப்பிள் வகை தக்காளி நாற்று நடவு செய்யவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த வகை நாற்று ஒரு ரூபாய்க்கு விற்கிறது.அதே போல், மிளகாய்70 முதல் 80 பைசாவுக்கும், கத்தரி50 பைசாவுக்கும், காலிபிளவர் 70 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.அதே போல் மிளகாய்20 சதவீதமும், கத்தரி, காலிப்பிளவர் 10 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.நடப்பு சீசனில்அதிக மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் விரைவில் அழுகாமல் தாங்கும் திறனுள்ள தோல்களை கொண்ட காய் எனஇரண்டு புதிய ரக தக்காளி விதைகள் நடவு செய்து நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்

    ×