search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் முற்றுகை"

    • எவ்வித காரணமும் கூறாமல் தங்களை வேலையிலிருந்து நீக்கியதால் திண்டுக்கல் யூனியன் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • இச்சம்பவத்தால் யூனியன் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 100 பேருக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

    தாடிக்கொம்பு அருகில் உள்ள பூஞ்சோலை பகுதியை சேர்ந்த 45 பேர்களுக்கு பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எவ்வித காரணமும் கூறாமல் பணித்தள பொறுப்பாளர் தங்களை வேலையிலிருந்து நீக்கியதால் திண்டுக்கல் யூனியன் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    சுமார் அரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் தெரிவிக்கையில் உங்களது ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்திருந்தால் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்காது.

    எனவே மீண்டும் உங்களது ஆதார் நகலை கொடுத்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் பணி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் யூனியன் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×