search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் சாலை மறியல்"

    • நத்தம் அருகே செந்துறை - நல்லபிச்சன்பட்டி பகுதியில் வெள்ளரி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
    • தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பணியாற்றும் தொழி லாளர்கள் செந்துறை - நத்தம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை - நல்லபிச்சன்பட்டி பகுதியில் வெள்ளரி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    தொழிற்சாலைக்கு செல்லும் லாரிகள் நல்லபிச்சன்பட்டி சாலையில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் சாலை சேதமடைந்து வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக தனியார் தொழிற்சாலை நிறுவனம் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை.மாற்றுப் பாதையில் தொழி ற்சாலைக்கு லாரிகளை இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தும் கேட்கவில்லை.

    இந்நிலையில் அந்த வழியாக பொருட்கள் ஏற்றி சென்ற லாரியை அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், லாரியை விடுவிக்க கோரியும் வெள்ளரி தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் பணியாற்றும் தொழி லாளர்கள் செந்துறை - நத்தம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து தொழி லாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் செந்து றை - நத்தம் சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் லாரியை சிறைபிடித்த கிராம மக்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் அதையடுத்து கிராம மக்கள் லாரியை விடுவித்தனர்.

    ×