search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடரும் கனமழை"

    • கனமழையால் பெரும்பாலான அணைகள் முழுகொள்ள ளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைபெரியாறு, வைகை, வராகநதி, கொட்டக்குடி ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
    • கும்பக்கரை, சுருளி அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க பொது ப்பணித்துறையினர் அறி வுறுத்தி உள்ளனர்.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை யும், கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது.

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுகொள்ள ளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைபெரியாறு, வைகை, வராகநதி, கொட்டக்குடி ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் கும்ப க்கரை, சுருளி அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க பொது ப்பணித்துறையினர் அறி வுறுத்தி உள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வருவதாலும், முதல்போக நெல்சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருவதாலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 1500 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 511 கனஅடியாக இருந்தது.அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக உள்ளது. 763 கனஅடிநீர் வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. 1759 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1819 கனஅடிநீர் திறக்க ப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 55 அடியில் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் 132 கனஅடியில் 40 கனஅடி நீர் பாசனத்திற்கும் 92 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணை யும் நிரம்பி 126.44 அடியில் உள்ளது. 226 கனஅடிநீர் வருகிறது. இதில் 30 கனஅடிநீர் பாசன த்திற்கும், 196 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படு கிறது.

    பெரியாறு 6, தேக்கடி 25.2, கூடலூர் 6.4, உத்தம பாளையம் 1.6, ைவகை அணை 2.8, போடி 12.4, மஞ்சளாறு 4.6, சோத்து ப்பாறை 36, பெரியகுளம் 28, வீரபாண்டி 12.2, அரண்மனைப்புதூர் 4.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×