search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவாங்கு மீட்பு"

    • சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது.
    • கழுகு கொத்தி தேவாங்கு காயம் அடைந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தன

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாைளம், காரமடை ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள் ஆகும்.

    இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு பன்றி, காட்டெருமை உள்பட ஆபத்தான விலங்குகளும், மயில், மான், முயல், தேவாங்கு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது.

    மனித-விலங்கு மோதலும் ஏற்படுகிறது. மான், மயில் ஊருக்குள் புகும்போது நாய்கள் அதனை கடித்து காயப்படுத்தி விடும்.அதனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திகடவு முகாமில் உள்ள சிறப்பு அதிரடி படையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு 4 வயது தேவாங்கு ஒன்று ஒரு கண் பார்வையற்று கையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியவாறு பரிதாபமாக அமர்ந்து இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறப்பு அதிரடி படையினர் தேவாங்கை மீட்டு தண்ணீர் கொடுத்து அரவணைத்தனர். பின்னர் அதனை பத்திரமாக மீட்டு வெளியே வந்தனர்.

    உடனே காரமடை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காரமடை வன அலுவலர் திவ்யா தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் தேவாங்கை ஒப்படைத்தனர் .வனத்துறையினர் சிகிச்சைக்காக தேவாங்கை வெள்ளியங்காடு கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தேவாங்கிற்கு சிகிச்சை அளித்து அதனை கண்காணித்து பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கழுகு கொத்தி தேவாங்கு காயம் அடைந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். அல்லது அதனை யாராவது வேட்டையாடும் போது காயம் அடை ந்து தப்பியதா? அல்லது வேறு ஏதாவது காரணமா எனவும் வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×