search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு முகாம்"

    • நாளை தொடங்குகிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுகளுடன் கூடிய தேசிய அடையாள அட்டை மற்றும் அனைத்து வயது நிரம்பிய மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான தேர்வு முகாம்கள் நடைபெற உள்ளது.

    நாளை 8-ந் தேதி திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வருகிற 12-ந் தேதி ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 15-ந் தேதி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 16-ந் தேதி அரக்கோணம் ஜோதி நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 20-ந் தேதி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22-ந் தேதி நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 26ம் தேதி காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,27-ந் தேதி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெறுகிறது.

    இதில் அனைத்து வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தேவைப்படும் எனில் தங்களது அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், ரேசன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றிருந்தால் அதன் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் 5 ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 25-ந் தேதி நடக்கிறது
    • விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சங்க இணை செயலாளரிடம் வழங்கலாம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட், சங்க தலைவர் சந்தோஷ் காந்தி, செயலாளர் செல்வகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது உட்பட்ட வீரர்களுக்கான மாவட்ட தேர்வு முகாம் தேர்வு வருகிற 25-ந் தேதி காலை 7.30 மணிக்கு ராணிப்பேட்டை இ.ஐ.டி.பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    தேர்வு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் கள் வயது வரம்பு -1.9.2009 தேதிக்கு மேல் பிறந்தவராக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை இ.ஐ.டி.பாரி மைதானத்தில், தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பெற்று பூர்த்தி செய்து சங்க இணை செயலாளர் பாஸ்கரிடம் (செல் -9842326373) வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆக்கி போட்டிகள் வருகிற மே மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
    • தமிழக அணி சார்பாக கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கான போட்டி தேர்வு தருமபுரியில் நடக்கிறது.

    தருமபுரி, 

    13-வது தேசிய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டிகள் வருகிற மே மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.

    இதில் தமிழக அணி சார்பாக கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கான போட்டி தேர்வு மாவட்டங்களுக்கு இடையான போட்டியாக வருகிற மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் 5- தேதி வரை தேனியில் பெண்களுக்கும், மார்ச் 3-ம் தேதி முதல் 8-மே தேதி வரை கோவில்பட்டியில் ஆண்களுக்கும் நடைபெற உள்ளது.

    தருமபுரி மாவட்டம் சார்பாக இந்த இரு போட்டிகளிலும் கலந்து கொள்ள இருக்கும் அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு முகாம் நாளை மறுநாள் சனிக்கிழமை கமலம் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் காலை 8 மணிக்கு பெண்களுக்கும், மதியம் 2 மணிக்கு ஆண்களுக்கும் நடைபெற உள்ளது.

    1.1.2004 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வீரர்கள் வரும் பொழுது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 எடுத்து வர வேண்டும் என்று தருமபுரி ஆக்கி சங்கத் தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

    ×