search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்புவீரர்கள்"

    • நேற்று மதியம் 11 மணி அளவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • மேயர் மகேஷ் நேரில் ஆய்வு

    நாகர்கோவில்: 

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால் வலம்புரிவிளை குப்பை கிடங்கு மலைபோல் காட்சி அளிக்கிறது. அந்தப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குப்பைக்கிடங்கை மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறார்கள்.

    குப்பை கிடங்கை மாற்று வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலை யில் குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துகள் நடந்து வருகிறது. நேற்று மதியம் 11 மணி அளவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் குப்பை கிடங்கு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளா னார்கள். நாகர்கோவில், கன்னியாகுமரி, திங்கள்சந்தை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இதை யடுத்து இன்று 2-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.நாகர்கோவிலில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகளும் கன்னியாகுமரி, திங்கள்ச ந்தையில் இருந்து வந்த 4 தீயணைப்பு வண்டிகளும் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    தீயணைக்கும் பணியில் 50 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைக்கும் பணி நடந்து வருகிறது.இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. இத னால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை மேயர் மகேஷ் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குப்பை கிடங்கில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க நடவ டிக்கை எடுக்க தீயணைப்புத் துறையினரிடம் மேயர் மகேஷ் கேட்டுக்கொண்டார்.

    ×