search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரும்ப பெறவேண்டும்"

    • தேசிய புலனா ய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தவறாக பயன்படுத்தி வருவதை உடனே கைவிடவேண்டும் அல்லது அந்த அமைப்பை கலைக்கவேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்பபெற வலியுறுத்தி, காரைக்காலில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நேற்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காரைக்கால் பெரிய பள்ளி வாசல் முகப்பில் தொடங்கிய இந்த பேரணி க்கு, காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணை ப்பாளர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பேரணி, காரைக்கால் திருநள்ளாறு சாலை, பாரதியார் சாலை, தோமாஸ் அருள் வீதி, காமராஜ் சாலை வழியாக சென்று, காரைக்கால் கடற்கரை சாலையில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால், திரு.பட்டினம், அம்பகரத்தூர், நிரவி, சேத்தூர், நல்லம்பல், திருநள்ளாறு, புதுத்துரை, நேரு நகர் பகுதி ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமு கர்கள், சமுதாய அமைப்பு களின் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், தேசிய புலனா ய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்ட த்தில், சிறுபான்மை சமூ கங்கள் மற்றும் மதச்சார்பற்ற  அரசியல் கட்சிகளை யும், ஜனநாயக அமைப்பு களையும் அச்சுறுத்தும் வகையிலும் மற்றும் மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்பபெற வேண்டும். மாநில அரசின் உரிமை களையும், மாநில காவல் துறையின் அதிகாரங்க ளையும் முற்றிலும் பறிக்கக் கூடிய தேசிய புலனாய்வு முகமையை, ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தவறாக பயன்படுத்தி வருவதை உடனே கைவிட வேண்டும். அல்லது அந்த அமைப்பை கலைக்கவேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    ×