search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிவேந்திரா சிங் ராவத்"

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் முதல் மந்திரி திரிவேந்திரா சிங் ராவத், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர். #Uttarakhandelections
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 92 நகராட்சிகளில் 84 நகராட்சிகளுக்கு உட்பட்ட பஞ்சாயத்து பதவிகளில் மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இந்த 84 நகராட்சிகளில் உள்ள 1064 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4,978 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 12.20 லட்சம் ஆண்  வாக்காளர்கள், 11.33  லட்சம் பெண் வாக்காளர்கள் என மொத்தம் சுமார் 23.53 மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர்.



    இதற்காக மாநிலம் முழுவதும் 2265 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1258 கண்காணிப்பு மையங்களும் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டேராடூன் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திரா சிங் ராவத் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.



    யோகா குரு பாபா ராம்தேவ் ஹரித்வார் நகரில் தனது வாக்கை பதிவு செய்தார். இன்று மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொது இடங்களிலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #UttarakhandCM #TrivendraSinghRawat #Uttarakhandelections  ##UttarakhandULBpolls
    ×