என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி வாரியர்"

    • இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி வாரியர்.
    • இந்த படத்தில் ராம் பொத்னேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

    கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து தற்போது லிங்குசாமி இயக்கியிருக்கும் படம் தி வாரியர்.

    இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கீர்த்தி ஷெட்டி, ஆதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    தி வாரியர்

    தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து சிம்பு பாடிய புல்லட் மற்றும் விசில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தி வாரியர் படத்திற்கு இயக்குனர் அட்லீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    • தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் “தி வாரியர்” உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக ராம் பொத்தினேனி நடித்து வருகிறார்.

    இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் திரைப்படம் "தி வாரியர்". தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார்.

    இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார்.

    தி வாரியர் - விசில்

    தி வாரியர் - விசில்


    ராம் பொத்தினேனி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிலம்பரசன் பாடிய புல்லட் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள விசில் பாடலை நடிகர் சூர்யா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆந்தோனி தாசன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.


    ×