என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார் திடீர் ஆய்வு"

    • தொடர்ந்து புகார்கள் வந்ததால் நடவடிக்கை
    • பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க அறிவுரை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் செக்குமேடு பகுதியில் ரேசன் கடை உள்ளது.

    இந்த ரேசன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் இந்த ரேசன்கடை அடிக்கடி மூடப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ஏ.கோடீஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் தரமற்ற முறையில் பல மாதங்களாக ரேசன் அரிசி வழங்கப்படுவதாகவும் இதனால் பலர் ரேசன் அரிசி வாங்காமல் திரும்பிச் செல்வதாகவும் குற்றம் சாட்டினர்.

    அதிகாரிகள் ரேசன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாக கிடங்கள் இருந்து வந்தால் உடனடியாக அதனைக் கிடங்கிற்கு திருப்பி அனுப்பி தரமான பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர் லாவண்யாகுமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பாதுகாப்பு குறித்து சோதனை
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் கலைஞர் கருணாநிதி தெரு பகுதியில் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திருவிழாக்கள் சித்திரை மாதம் நடைபெறுவது யொட்டி அதற்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் தலைமையில் பாதுகாப்பு குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மேற்படி பட்டாசு தயாரிக்கும் அறைகளில் மின் இணைப்பு ஏதும் இல்லை. அனைத்து அறைகளும் நான்கு நுழைவுகள் உடன் நல்ல காற்றோட்டத்துடன் தீயணைப்பான் கருவியும் வைக்கப்பட்டு நல்ல பாதுகாப்பான முறையில் உள்ளன.

    மேலும் பட்டாசு தயாரிக்கும் இடத்தில் இருந்து சுற்றி சுமார் 600 மீட்டர் சுற்றளவில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமில்லை என தெரிய வந்தது.

    ஆய்வின் போது நாட்டறம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, மற்றும் கிராம உதவியாளர் வரதராஜ் உள்பட வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    ×