search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிநபர்கள்"

    • மேல்நிலை தொட்டிக்கு செல்லும் தண்ணீரை மோட்டார் வைத்து திருடும் தனிநபர்களால குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்படுகிறார்கள்.
    • குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் பனைக்குடி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பல மாதங்களாக குடிநீருக்காக கடும் அவதி வருகின்றனர்.

    பனைக்குடி பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை தொட்டி மட்டுமே உள்ளது.இதற்கு நாள்தோறும் குடிநீர் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் பனைக்குடி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வரும் தனி நபர்கள் சிலர் பம்பு செட்டிலிருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குடிநீரை திருடி தங்களது வீடுகளில் வைத்துள்ள சின்டெக்ஸ் டேங்குகளில் நிரப்பி வருகின்றனர்.

    இதனால் கிராம மக்கள் போதிய குடிநீர் கிடைக்க வழியின்றி கடும் அல்லல் படுகின்றனர். சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீரை சேகரிப்பவர்கள் குளிப்ப தற்கும், புழங்குவதற்கும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சவும் என வீணாக பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்து வரு கின்றனர்.

    நாள்தோறும் குடிக்கவே தண்ணீரின்றி குடங்களை தூக்கிக்கொண்டு அடுத் தடுத்த தெருவிற்கு அலைந்து வரும் சூழ்நிலையில் தனி நபர்களின் இவ்வாறான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில சமயங்களில் மேல் நிலை தொட்டி நிரம்பினா லும் குடிநீர் வீணாகி 24 மணி நேரமும் மின் மோட்டார் இயங்குவதுடன் குடிநீரும் அப்பகுதியின் பல்வேறு இடங்களில் ஆறாக ஓடுவதாகவும், இது குறித்து ஆபரேட்டரிடம் பலமுறை எடுத்துக்கூறியும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து கண்டுகொள்வதே இல்லையெனவும் பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    ஆகவே சம்மந்தப்பட்ட நரிக்குடி யூனியன் அலுவலக அதிகாரிகளும், குடிநீர் வாரிய அதிகாரிகளும் உடனடியாக பனைக்குடி கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு குடிநீரை வழிமறித்து அதனை சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீரை வீணாக்கி வருபவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் குடிநீர் நீரேற்று நிலையத்தை 24 மணி நேரமும் இயக்கி அதன் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் வீணாக முக்கிய காரணமாக இருந்து வரும் குடிநீர் ஆப்ரேட்டர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி களின் ஆய்வாளரான மாவட்ட கலெக்டருக்கும் பொதுமக்களும், சமூக அலுவலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    ×