search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராகன் ஹின்ஜ்"

    டி.சி.எல். நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த புதுவித தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #TCL



    டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் காப்புரிமை பெற்ற தனது டிராகன்ஹின்ஜ் தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இத்துடன் அந்நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட சாதனத்தையும் அறிமுகம் செய்தது. டி.சி.எல். மடிக்கக்கூடிய மொபைல் சாதனங்களில் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேக்களை சிசாட் எனும் நிறுவனம் வழங்குகிறது.



    இந்நிறுவனம் டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவன குழுமத்தை சேர்ந்தது. சிசாட் தற்சமயம் உருவாக்கி இருக்கும் டிராகன் ஹின்ஜ் தொழில்நுட்பம் சாதனங்களை பல்வேறு விதங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப மடிக்கவும், வளைக்கவும் முடியும். இது எதிர்கால மடிக்கக்கூடிய சாதனங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

    டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் தனது முதல் டிராகன் ஹின்ஜ் கான்செப்ட் கொண்ட சாதனங்களை வரும் நாட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத்தொடர்ந்து நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய மடிக்கக்கூடிய சாதனங்களை 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய டி.சி.எல். திட்டமிட்டுள்ளது.
    ×