search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயதேவ் உனத்கட்"

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் உனத்கட் இடம் பிடித்தார்.
    • இந்த போட்டியில் விளையாடிதன் மூலம் 9 ஆண்டு 252 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் அவர் இடம் பிடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

    இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான 31 வயதாகும் ஜெயதேவ் உனத்கட், இந்த போட்டியில் விளையாடிதன் மூலம் 9 ஆண்டு 252 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு திரும்பியதன் மூலம் அவர் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

    இதற்கு முன்னர் இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங், 7 ஆண்டு 230 நாள்கள் கழித்து களமிறங்கியது தான் ஒருநாள் போட்டிகளில் அதிக இடைவெளி விட்டு விளையாடியதாக இருந்தது. அதாவது முதன் முதலில் 1989-ம் ஆண்டு விளையாடி ராபின் சிங் பின்னர் 1996-ல் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    இதைத்தொடர்ந்து ஜெயதேவ் உனத்கட் கடைசியாக 2013-ம் ஆண்டில் இந்திய ஒருநாள் அணியில் விளையாடினார். இதன் பின்னர் தற்போது 2023-ல் மீண்டும் விளையாடியுள்ளார்.

    தனது கம்பேக் போட்டியில் 5 ஓவர்கள் பந்து வீசிய உனத்கட் 16 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

    • அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    லக்னோ:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இந்த சீசனில் முன்பு எப்போதும் இல்லாததை விட பெரும்பாலான ஆட்டங்களின் முடிவுகள் மிகவும் நெருக்கமாக அமைவதால் டாப்-4 இடங்களை பிடிப்பது யார் என்பதை கணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. குறைந்தது 9 வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி 'பிளே-ஆப்' சுற்றை அடைய முடியும்.

    இந்த நிலையில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜெயதேவ் பந்தை வீசும்போது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயதேவ் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    அவர் வருகிற ஜூன் 7-ம் தேதி லண்டனின் தி ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள்ளாக உடல்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஜெயதேவ் உனத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ரஞ்சி கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றுள்ள சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக ஜெயதேவ் உனத்கட் விளையாடவுள்ளார்.

    இவரை தொடர்ந்து காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத அய்யர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இடம் பெறுவது கடினம் என தகவல் வெளியாகி உள்ளது.

     

    என்.சி.ஏ-ல் பயிற்சி பெற்று வரும் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்வது போல சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாட திரும்புவதற்கான விதிமுறை குறைந்தபட்சம் உள்நாட்டு சுற்றுகளில் ஒரு ஆட்டத்தையாவது விளையாடுவதாகும்.

    எனவே உடனடியாக டெஸ்ட் அணியில் இடம் பெறுவது கடினமாகும். ரஞ்சி டிராபி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், ஐயர் தனது உடற்தகுதியை நிரூபிக்க மார்ச் 1-5 வரை நடைபெறும் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இராணி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு விளையாட அழைக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    முதல் டெஸ்டில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா, பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய முகாமில் சேர்வதற்கு முன்பு தமிழ்நாடு அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×