என் மலர்
நீங்கள் தேடியது "ஜவுளி வியாபாரி பலி"
கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஜவுளி வியாபாரி மீது பைக் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள பிஆர்ஜி.மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(51). ஜவுளி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலை பிஆர்ஜி.மாதேப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு மாங்காய் மண்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த பைக் அவர் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்து சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.






