search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமாலியா குண்டுவெடிப்பு"

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். #Mogadishubombing #carbombing
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

    டப்க்கா என்னுமிடத்தில் வபாரி காலல் நிலையம் அருகே நடந்த இந்த தாக்குதலில் அந்த சாலை வழியாக சென்ற பல வாகனங்கள் சேதமடைந்தும், உருக்குலைந்தும் கிடக்கும் காட்சிகளை உள்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. #Mogadishubombing  #carbombing
    சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். #carbombing #Mogadishucarbombing
    மொகடிஷு:

    அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

    அவ்வகையில், சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அலுவலகத்தின் மீது இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் தொழிலாளர் நலத்துறை துணை மந்திரி சக்கர் இபுராஹிம் அப்தல்லா உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 

    பலத்த காயங்களுடன் பத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இன்றைய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #carbombing #Mogadishucarbombing
    சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் அல் ஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 30 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். #Somaliakills #alShabab #Somaliamilitants
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர். இவர்களை ஒழிக்கும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்காவை சேர்ந்த அதிரடிப் படையினரும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், சோமாலியாவின் தென்பகுதியில் மத்திய ஜுபா அருகேயுள்ள ஜிலிப் நகரில் இன்று சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்த 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு சொந்தமான முகாமை ராணுவ சிறப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்கியதாகவும், இதில் சிரியா, லிபியா ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. #Somaliakills #alShabab #Somaliamilitants
    சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #SomaliaBlast
    மொகடிஷு:

    சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகளும் அமெரிக்க படைகளும் உதவி புரிந்து வருகின்றன.

    கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தரைவழி தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.



    இந்நிலையில் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை அருகே இன்று இரண்டு முறை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பணி நிமித்தமாக சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 6 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    குண்டுவெடிப்பில் சேதமடைந்த வாகனங்கள் மற்றும் சிதறிய கட்டிடத்தின் பாகங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #SomaliaBlast
    சோமாலியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #SomaliaBlasts
    மொகடிஷு:

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. நேற்று அந்த உணவகத்தின் அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் துடித்தனர்.

    தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஓட்டல் உரிமையாளரும் ஒருவர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.



    இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓட்டலுக்குள் இருந்த அரசு அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

    தாக்குதல் நடந்த ஓட்டலுக்கு வெளிநாட்டு பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. #SomaliaBlasts
    ×