search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்சூளை"

    • தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார்.

    இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒருவருக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இந்த நிலையில் ஏசுதாசன், ஆரல்வாய்மொழி சர்ச் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் ஏசுதாசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் தெரிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டை சேர்ந்த தங்க ஜோஸ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். கொலை செய் யப்பட்ட ஏசுதாச னுக்கும், அன்பு வின் உறவுக்கார பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பே இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஏசுதாசனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் ஏசுதாசனின் மனைவி ஜெயா, மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதன் பிறகு தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி னார்கள். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி. நவீன்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை சந்தித்தும் அவர்கள் பேசினார்கள். அப்போது ஆரல்வாய்மொழி போலீசாரின் அலட்சியத்தின் காரணமாகவே எனது கணவரை கொலை செய்து விட்டனர் என்று கண்ணீர் விட்டு ஏசுதாசனின் மனைவி கதறி அழுதார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டனர். மதியத்திற்கு பிறகு ஏசுதாசனின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏசுதாசனின் உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. கொலையாளி களை பிடிக்க போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

    4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. கொலையாளிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். குமரி மலையோர பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டை சேர்ந்த தங்கஜோஸ போலீசாரிடம் சிக்கினார்.

    அவரை கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட தங்கஜோசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தலை மறைவாக உள்ள அன்பு, விஜயன், மணிகண்டனை பிடிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×