search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய சக்தி கார்"

    தாஜ் மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் விலையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். #tajmahal #solarcar
    லக்னோ:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், ஆக்ரா பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தாஜ்மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் நவீன காரை கண்டுபிடித்துள்ளனர்.

    ஆக்ரா நகரின் நெரிசல் மிகுந்த சாலையில் மணிக்கு அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியாய் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டும், வாகனங்கள் வெளியிடும் புகையால் தாஜ் மஹால் மேலும் மாசுபடாமல் தடுக்கும் வகையிலும் இந்த கார் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மாணவர்கள், நமது நாட்டில் ஆண்டுதோறும் சூரிய ஒளி கிடைப்பதாலும், இந்த காருக்கான உதிரிபாகங்கள் சுலபமாக கிடைக்கும் என்பதாலும் இந்த திட்டம் நல்ல பலனைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    நான்கு பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “நெக்ஸ்ஜென்”  (Nexgen)  காரின் விலை 50 ஆயிரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  #tajmahal #solarcar
    ×