search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன உளவு பலூன்"

    • உளவு பலூன் தான் எனக்கூறி அதன் சிதறிய பாகங்களை சேகரித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது.
    • சீனா பலூன் பற்றிய தகவல்களை பகிர அமெரிக்கா மறுத்து விட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    பீஜிங்:

    அமெரிக்க வான்வெளி பகுதியில் பறந்த சீனாவின் உளவு பலூனை சுடுமாறு அந்நாட்டு அதிபர் ஜோபை டன் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 4-ந்தேதி தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் அமெரிக்கா போர் விமானம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது உளவு பலூன் அல்ல என சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் அது உளவு பலூன் தான் எனக்கூறி அதன் சிதறிய பாகங்களை சேகரித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. இது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது.

    இது குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அமெரிக்காவிடம் சீனா கோரிக்கை விடுத்தது. இதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் சீனா பலூன் பற்றிய தகவல்களை பகிர அமெரிக்கா மறுத்து விட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அதன் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது பலூனை சுட்டதில் இருந்து அதனை பகுப்பாய்வு செய்வது வரை முற்றிலும் தன்னிச்சையாகவும், மறைமுகமாகவும் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இது பற்றி எந்த விளக்கத்தையும் அந்த நாடு பகிரவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    • அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • பலூன் எங்கிருந்து வந்தது என்ற விவரம் எதுவும் இல்லை.

    ஹவாய்:

    அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஜோபை டன் உத்தரவின் பேரில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமெரிக்க மற்றும் கனடா வான்வெளியில் பறந்த 3 மர்ம பொருளையும் அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹவாய் தீவில் உள்ள ஹனலோவ் என்ற இடத்தில் 500 மைலுக்கு அப்பால் ராட்சத வடிவிலான வெள்ளை நிற பலூன் மர்மமான முறையில் பறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சுமார் 40 ஆயிரம் அடி முதல் 50 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மர்ம பலூன் பறப்பதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பான அந்த பலூனின் புகைப்படமும் வெளியாகி உள்ளது. அந்த பலூன் எங்கிருந்து வந்தது என்ற விவரம் எதுவும் இல்லை. இதையடுத்து அங்கு உஷார் படுத்தப்பட்டு உள்ளது.

    • சீனாவுக்கு அமெரிக்க மந்திரி நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு சீனா உதவிகள் வழங்கினால் தடைகள் மற்றும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க மந்திரி தெரிவித்தார்.

    முனிச்:

    அமெரிக்காவின் மென்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது.

    ஆனால் அதை மறுத்த சீனா, அந்த பலூன் வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்டது என்று தெரிவித்தது. பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இவ்விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜெர்மனியில் முனிச் நகரில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீனாவின் மூத்த வெளியுறவு கொள்கை அதிகாரியான லாங் யீ ஆகியோர் சந்தித்து பேசினர்.

    உளவு பலூன் விவகாரத்துக்கு பிறகு இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது சீனாவுக்கு அமெரிக்க மந்திரி நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வான்வெளியில் உள்ள பலூனை அனுப்பும் பொறுப்பற்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்று சீனாவை எச்சரித்தார். அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

    மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு சீனா உதவிகள் வழங்கினால் தடைகள் மற்றும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க மந்திரி தெரிவித்தார்.

    அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் உளவு பலுன் விவகாரத்தால் அந்த பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது.
    • சீனா வான் எல்லைக்குள் அமெரிக்காவின் பலூன்கள் 10 முறைக்கு மேல் அனுமதியின்றி பறந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் அட்லாண்டிக் கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அதை சீனா மறுக்கிறது. அதன்பின்னர் அமெரிக்காவில் கடந்த 10-ந்தேதியும், நேற்றும், நடுவானில் பறந்த 2 மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

    கனடாவிலும் மர்ம பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தபட்டுள்ளது. இதற்கிடையே சீனா வான் எல்லைக்குள் அமெரிக்காவின் பலூன்கள் 10 முறைக்கு மேல் அனுமதியின்றி பறந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியது.

    2022-ம் ஆண்டு ஜனவரி முதல் சீனா வான்பரப்புகளில் அமெரிக்க ராட்சத பலூன்கள் பறந்ததாகவும், அதனை பொறுப்புடன் தொழில் ரீதியாக அணுகியதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, 'சீனாவின் மீது அமெரிக்கா கண்காணிப்பு பலூன்களை பறக்கவிடவில்லை. சீன வான்வெளியில் நாங்கள் எந்தவித பலூன்களையும் நாங்கள் அனுப்பவில்லை' என்றார்.

    வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கரீன்-ஜூன் பியர் கூறும் போது, 'அமெரிக்க வான்பரப்பில் பறந்த மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அது வேற்றுகிரக வாசிகள் அல்லது வேற்று கிரக நடவடிக்கைகள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

    இதுகுறித்து கேள்விகள் மற்றும் கவலைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அது வேற்றுகிரக வாசிகள் அல்ல' என்றார்.

    • உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது
    • இது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் என சீனா கூறி உள்ளது

    பீஜிங்:

    அமெரிக்காவின் மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது, உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது சட்டபூர்வமான நடவடிக்கை என்றும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

    ஆனால் இதற்கு சீனா கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் எனவும், இதற்கு தேவையான பதில் நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

    • அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன் பெரிதாக இருந்தது.
    • அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும்.

    இதற்கிடையே, அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.

    தகவலறிந்த ராணுவ அதிகாரிகள் அந்த பலூன் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த பலூன் சீன நாட்டின் தயாரிப்பு என கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில், அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன் 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது. அதனுள் என்னென்ன இருந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.

    மேலும், லத்தீன் அமெரிக்கா பகுதியிலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

    இந்நிலையில், மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட உளவு பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

    இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், அதிபர் ஜோ பைடனின் வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்க போர் விமானம் தென் கரோலினா கடற்கரையில் உள்ள நீர் மீது சீன மக்கள் குடியரசால் ஏவப்பட்ட உயரமான கண்காணிப்பு பலூனை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லத்தீன் அமெரிக்கா பகுதியில் மேலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • லத்தீன் அமெரிக்காவில் பலூன் ஒன்று பறந்து வருகிறது.

    லத்தீன் அமெரிக்கா பகுதியில் மேலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பென்டகன் கூறும்போது, லத்தீன் அமெரிக்காவில் பலூன் ஒன்று பறந்து வருகிறது. இது மற்றொரு சீன உளவு பலூனா என ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் பறக்கும் பலூன் மத்திய அமெரிக்காவில் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது சில நாட்களில் அமெரிக்க வான்பரப்பில் இருக்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது.
    • அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பீஜிங்:

    அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

    அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவை கைவிட்டனர்.

    ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து சீன வெளியுறவு விவகார அமைச்சகம் கூறியதாவது:-

    அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் எங்களுடையதுதான். அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல். அது ராணுவ பயன்பாட்டுக்கானதல்ல. பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதாகும். மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்பு கொண்டு விளக்குவோம் என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா வான் பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்தான் என்று சீனா அளித்துள்ள விளக்கத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஏற்க மறுத்து விட்டது.

    இதுகுறித்து பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் டைரடர் கூறும்போது, "சீன அரசின் விளக்கம் பற்றி அறிந்தோம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும். அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபற்றி சீன அரசிடம் தூதரக ரீதியிலும் மற்றும் பல்வேறு மட்டங்களிலும் நேரடியாகவே தெரிவித்து விட்டோம்" என்றார்.

    • பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
    • சீன பயணத்தின்போது இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என தகவல்

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது. அதன் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், தனது சீன பயணத்தை ஒத்திவைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சீன அதிகாரிகளுடனான தனது சந்திப்புகளின்போது, இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக ஏபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது. அவரது சீனப் பயணம் ஒத்திவைக்கப்படும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.
    • அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன், 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது.

    இந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம பலூன் பறப்பதை கண்டுபிடித்தனர்.

    உடனடியாக இந்த தகவல் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த பலூன் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டை சேர்ந்தது என்பது பற்றி ஆய்வு செய்தனர். இதில் அந்த பலூன் சீன நாட்டின் தயாரிப்பு என கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது.

    இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் கூறியதாவது:-

    அமெரிக்க அணு ஆயுத ஏவுதளம் மீது பறந்த சீன உளவு பலூன், 3 பேருந்துகளின் அளவுக்கு பெரிதாக இருந்தது. அதனுள் என்னென்ன இருந்தது என்பதை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    இந்த பலூன் வணிக ரீதியான பலூன் போல தெரியவில்லை. அதற்கான பாதையிலும் அந்த பலூன் பறக்க வில்லை. அதனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அதனை செய்ய நாங்கள் முன்வரவில்லை. என்றாலும் அணு ஆயுத ஏவு தளத்தில் இருந்து எந்த தகவலையும் அறிந்த கொள்ள முடியாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.

    ×